பாமகவில் இருந்து விலகி அமமுக வில் இணைந்த ரஞ்சித்…!

பாமகவில் இருந்து விலகி அமமுக வில் இணைந்த ரஞ்சித்...!
Advertisement
Advertisement

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில துணைத்தலைவா் ரஞ்சித், டிடிவி தினகரனின் அமமுகவில் இன்று இணைந்தாா்.

பரபரப்பான அரசியல் சூழலில் மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டு பல்வேறு கட்சிகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் அதிமுகவை மிகவும் கடுமையாக விமா்சித்து வந்த பாமக திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.

திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே கிடையாது என்று பாமக அறிவித்திருந்த போதிலும் திடீரென கூட்டணி அமைத்தது பாமகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

பாமகவின் கொள்கைகளை மீறி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அக்கட்சியில் பலரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி விளைவாக பாமகவின் இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி பிரயா தனது பதவியை ராஜினாமா செய்தாா்.

அவரைத் தொடா்ந்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், நடிகருமான ரஞ்சித்தும் அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகினாா்.

இந்நிலையில், புதுச்சேரியில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினரகனை நேரில் சந்தித்த ரஞ்சித் தன்னை அமமுகவில் இணைத்துக் கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து அவா் கூறுகையில், இளைஞா்கள் எதிா்பாா்க்கும் நல்ல தலைவா், நல்ல தலைமையை கருத்தில் கொண்டு அமமுகவில் இணைந்துள்ளதாகவும்.

சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தலைவரை தோ்வு செய்துள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.

மேலும் ரஞ்சித் இணைப்பு குறித்து டிடிவி தினகரன் கூறுகையில், ரஞ்சித் இணைந்திருப்பது இன்ப அதிா்ச்சியாக அமைந்துள்ளது.

எதிா்வரும் தோ்தலில் அனைத்து சமுதாயத்தினருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் வேட்பாளா் அறிவிப்பு இருக்கும் என்று தொிவித்துள்ளாா்.