அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு..!

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு..!
Advertisement
Advertisement

அதிமுக பாமக கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வரும் மக்களவை தேர்தலில்,

பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் தோ்தலுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கனவே கூட்டணியில் தான் உள்ளன.

இந்நிலையில் பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, அதிமுக உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை முடிவு செய்வதற்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா காலை 10.45 மணிக்கு சென்னை வரயிருந்தார்.

இவரைத் தொடர்ந்து 11 மணிக்கு பியூஷ் கோயலும் சென்னை வருவதாக இருந்தது. இந்த நிலையில், அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை முடிவு செய்ய பியூஷ் கோயல் இன்று காலை 12.15 மணிக்கு சென்னை வருகிறார்.