தமிழகம் வரும் மோடி..! ட்ரெண்டிங்கில் GoBackModi ஹேஷ்டேக்..!

தமிழகம் வரும் மோடி..! ட்ரெண்டிங்கில் GoBackModi ஹேஷ்டேக்..!
Advertisement
Advertisement

இன்று பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க, இன்று கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி.

மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசு‌ நிகழ்ச்சியில் பங்கேற்று பல நலத்திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார்.

விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் வரும் மோடி, பின் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

அங்கிருந்து அரசு விழா நடக்கும் இடத்திற்கு காரில் செல்கிறார். இதில் மதுரை-சென்னை‌ தேஜஸ் ரயில் சேவையை மோடி துவங்கி வைக்கிறார்.

அதோடு ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் சேவையை புதுப்பிக்க அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.

இந்த ரயில் சேவை கடந்த 1964ல் ராமேஸ்வரத்தில் ஏற்பட்ட சூறாவளியில் சேதமடைந்தது. இதன் பின் தற்போது இந்த சேவை புதுப்பிக்கப்படவுள்ளது.

அதேபோல 104 ஆண்டு வயதான பாம்பன் ரயில் பாலத்தை புதுபிக்கும் திட்டத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டுகிறார்.

அதோடு மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலத்தை அவர் திறந்து வைக்ககிறார். தவிர, பணகுடி-கன்னியாகுமரி சாலை, மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த ‌விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முத‌ல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம்#GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகும்.

இதையடுத்து இன்று மீண்டும் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.

இந்த ஹேஷ்டேக் ஏற்கனவே பல முறை டிரெண்டாகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் டிரெண்டாகியுள்ளது.