வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ. 100 நாணயம் வெளியீடு..!

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ. 100 நாணயம் வெளியீடு..!
Advertisement
Advertisement

நாளை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு,

பிரதமர் நரேந்திர மோடி அவர் உருவம் பொறித்த ரூ. 100 நாணயத்தை டெல்லியில் இன்று வெளியிட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நாட்டின் சிறந்த நிர்வாக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நாளை வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது.

அதை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ. 100 நாணயத்தை வெளியிட்டார்.

இந்த விழாவில் பாஜக தலைவர் அத்வானி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் முன்னாள் பாஜக தேசிய தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட இந்த ரூ. 100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும்,

அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாணயத்தில் வாஜ்பாயின் தோற்றம் மற்றும் மறைவு உள்ளிட்ட விவரங்கள்,

மறுபுறத்தில் சிங்கத்தின் சின்னமும், அதற்கு கீழ் ரூ. 100 குறியீடும், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்தில் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயம் வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.