அமமுகவில் இணைந்த பின்னணி பாடகர் மனோ..!

அமமுகவில் இணைந்த பின்னணி பாடகர் மனோ..!
Advertisement
Advertisement

தினகரன் முன்பு அமமுகவில் பின்னணி பாடகர் மனோ இணைந்தார். அமமுகவில் இணைந்த பின்னணி பாடகர் மனோ..!  

அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டவுடன் குக்கர் சின்னத்தில் தனியொருவனாக ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக தினகரன் அறிவித்துள்ளார். மேலும் 39 தமிழக தொகுதிகளில் ஒரு தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக- பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்ததை விரும்பாத நடிகர் ரஞ்சித் பாமகவிலிருந்து விலகி கடந்த வாரம் அமமுகவில் இணைந்தார்.

இதையடுத்து பின்னணி பாடகர் மனோ சென்னையில் தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் இணைந்தார்.