என்னோடு விளையாடு

38
943
என்னோடு விளையாடு
Advertisement
Advertisement

அருண் கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‛என்னோடு விளையாடு’.

“டோரண்டோரீல்ஸ் ” -“ரேயான் ஸ்டுடியோஸ் ” பட நிறுவனங்களின் தயாரிப்பில் , பரத் , கதிர், சாந்தினி , சஞ்சிதா ஷெட்டி ராதாரவி ,வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்க அருண் கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் குதிரை பந்தைய சூதாட்ட கதைக்களத்தோடு., சூதாடாதீர்கள் .. சூதாட்டம் குடும்பத்திற்கு கேடு என்னும் மெஸேஜை வலியுறுத்தி வந்திருக்கும் படம் தான் “என்னோடு விளையாடு.”

கதைப்படி ,ஒரு கட்டுமான நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் பரத் ,

பொறுப்பில்லாமல் கம்பெனிக் காசை எடுத்தும் , எக்கச்சக்கமாக கடன் வாங்கியும் குதிரை ரேஸில் பணத்தை இழக்கிறார்.

ஒரு கட்டத்தில் குதிரை பந்தயத்தில் உள்ள தகிடுதத்தங்கள் …பரத்திற்கு தெரிய வருகிறது .அதை அறிந்து குறிப்பிட்ட பந்தையம் ஒன்றில் சில கோடிகளை ஜெயிக்க நினைக்கிறார்.

இதற்காக பல லட்சங்கள் அவருக்கு தேவைபடுகிறது . இந்நிலையில் பரத்தின் நண்பரும் மற்றொரு நாயகருமான கதிரின் காரில் , பெரும் குதிரை ஓனர் ராதா ரவியின் குதிரை பேரத்திற்கான 50 லட்சம் பணம் கதிருக்கேத் தெரியாமல் வைக்கப்படுகிறது .

இதை தெரிந்து கொள்ளும் பரத் .,அதை வைத்து குதிரை பந்தயத்தில் ஜெயிக்க நினைக்கிறார். அதே நேரம் கதிரின் காதலி சஞ்சிதா ஷெட்டியின் வங்கி அடமான வீடு ஏலத்தில் போக இருக்கிறது .அதை மீட்கவும் பல லட்சங்கள் தேவைப்படுகிறது .

இத்தருணத்தில் ., ராதா ரவியின் ஆட்கள் கதிரையும் ,காரையும் சுற்றி வளைக்கின்றனர் .கதிர்கட்டு கட்டாக தன் காரில் இருக்கும் காசு பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தாரா ? அல்லது காதலியின் அடமான வீட்டை மீட்டாரா …?.

அல்லது அதற்குள் அப்பணத்தை அடித்து பரத் குதிரை பந்தயத்தில் கட்டி ஜெயித்து தன் கடன் தொல்லைகளில் இருந்து தப்பித்தாரா ..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு திக் திக் திக் திருப்பங்களுடன் பக் , பக் , பக் …பயணம் செய்து எதிர்பாராத கோணத்தில் வித்தியாசமாகவும் விறு விறுப்பாகவும் விடை சொல்கிறது

“என்னோடு விளையாடு” படத்தின் கதையும் , களமும்! குதிரை பந்தையத்தில் ஏமாந்து பின் ,ஏற்றம் பெரும் இளைஞராக பரத் பக்காவாக நடித்திருக்கிறார்

பரத் – சாந்தினியின் காதல் காட்சி சுள் மாதிரியே பரத் சம்பந்தப்பட்ட குதிரை பந்தைய காட்சிகளும், அதில் அவரது நடிப்பும் ரசனை.

மற்றொரு நாயகர் கதிரும் அவர் பங்குக்கு அசத்தலாக நடித்திருக்கிறார். சாந்தினி , சஞ்சிதா ஷெட்டி இரு நாயகியரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்.

குதிரை பந்தைய கோமகனாக ராதாரவி ,வெங்கடேஷ் உள்ளிட்டோரும் நச்சென்று நடித்திருக்கின்றனர்.

கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு , பலவீனமில்லாத பக்கா தொகுப்பு. யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் குறிப்பாக குதிரை பந்தயக் காட்சிகள் பின்னி பெடலெடுக்கின்றன .

சுதர்ஷன் எம்.குமார் ,மோசஸ் இருவரது இசையில் ,”விடிய விடிய பொண்ணுக்கிட்ட மாட்ட வச்ச ஆண்டவா” “நீயும் நானும் …”, “கணாக்கான வா எனைக் காண வா …. ” ஆகிய பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டல்

அருண் கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் குதிரை ரேஸ்கள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருப்பது இப்படத்தின் பெரும் பலம் .

மேலும் ,”ஒரு லட்ச ரூபாய் தோற்கிற போது பெரிசா , வருத்தம் வராது .ஆனாஆயிரம் ரூபா ஜெயிக்கிற போது கிடைக்கிற சந்தோஷத்திற்காகவே பலரும் குதிரை பந்தையத்தில் இருக்கிறார்கள் … ” எனும் நிதர்சனம் முதற் காட்சியிலேயே வசனமாக வைக்க ” இவளுங்களை எல்லாம் விட்டு 2 அடி தள்ளி நிற்கணும் இல்லன்னா நம்ம மாச சம்பளம் அவங்க காஸ்டியூம் ஆயிடும் … ” , “சகுணத்தைக் கூட குதிரையை வச்சு தான் பார்ப்பார் …” , “அன்னைக்கு சைடு ஸ்டேன்ட் எடுக்காது போனதால் தான் உன்னை பார்க்கிற மாதிரி ஆயிடுச்சு … அதுக்கான தண்டனையை இப்ப கொடுத்துடாத … ” என்பது உள்ளிட்ட நிதர்சன” பன்ச் “கள் இப்படத்திற்கு பெரும் பலம் .

ஒரே பலவீனம் ., குதிரை பந்தைய சூதாட்ட கதைக்களத்தோடு., சூதாடாதீர்கள் .. சூதாட்டம் குடும்பத்திற்கு கேடு… என்னும் மெஸேஜை வலியுறுத்திட வந்திருக்கும் திரைப்படமான “என்னோடு விளையாடு.”

இன்னும் பலருக்கு குதிரை பந்தைய ஆசையை ஏற்படுத்திடும் வகையில் க்ளைமாக்ஸில் முடித்து வைக்கப்படுவது ..சற்றே நெருடலாக இருக்கிறது.

மற்றபடி ., “என்னோடு விளையாடு.” படத்தை எல்லோரும் பார்க்கலாம் , ரசிக்கலாம். விளையாடவும் செய்யலாம்!