பனை வளர… வானம் வாழ்திய திருநாள் …!

40
1115
பனை வளர... வானம் வாழ்திய திருநாள் ...!
Advertisement

பனை வளர… வானம் வாழ்திய திருநாள் …!

Advertisement

“கோவை குளம் பாதுகாப்பு அமைப்பின்” சுயநலம் இல்லாத பொது நலச் சேவையை பாராட்டி,பனை வளர… வானம் வாழ்திய திருநாள் …!

வானம் வாழ்திய திருநாள் நேற்று (20-8-2017) கோவை குனியமுத்தூர் பகுதியில் நடந்தது.

ஆம் மனிதனுக்கு தேவை மனை… ஆற்றங்கரைக்கு தேவை பனை…

நமது தமிழகத்தின்… மாநில மரமான பனை மரங்களை ஆற்றங்கரையோரங்களில் கரைகளை பலப்படுத்துவதற்காக முன்னோர்கள் நட்டு வைத்தனர்.

ஆனால் அவற்றின் மகத்துவம் அறியாமல் நாம் அழித்துவிட்டோம்.

எனவே பனை விதைகளை நட்டு மீண்டும் கரைகளை பலப்படுத்தி, நீர்நிலைகளை காக்க முற்ப்பட்டது “கோவை குளம் பாதுகாப்பு இயக்கம்”

அரசு பொதுப்பணித்துறையின் மெத்தனத்தை  குற்றம் குறை சொல்லிவிட்டு போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலைமறியல் என்று விளம்பரம் தேடாமல்

இவர்கள் நீர்நிலைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் இருபத்தி எட்டாவது வார தொடர் களப்பணியில்,

பனை விதை நடும் முதல் வார களப்பணியாக நொய்யல் ஆற்றங்கரைதனில் பனை விதை நடவு செய்தார்கள்.

                     

இது வருங்கால சந்ததிக்கு புது விடிவு தரும் என்ற நம்பிக்கையில்.

பனை விதை நிலத்தை தோண்டி நடவேண்டியிருப்பதால் குழி தோண்டும் உபகரணம் எடுத்து வரவும்.என்று

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் அழைப்பையேற்று கோவை இளைஞர்கள் படை திரண்டது.

                       

வானுயர்ந்து பனை வளர…

வானம் வாழ்த்திய நாளாக அன்று (20-8-2017) மறினள் இயற்கை அண்ணை……!

கோவை குனியமுத்தூர் தடுப்பணை வாய்க்கால் பகுதியில் பனை விதை நடும் களப்பணியில் 70க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

2 கி.மீ தூரத்திற்கு இரண்டாயிரம்பனை விதைகள் துளையிடும் கருவி கொண்டு துளையிட்டு நடப்பட்டன.

                            

பனை விதைகள் நட்டு முடிந்த நேரத்தில் வானம் மழையை தூவி வாழ்த்தியது.

வானமும் இணைந்து களப்பணியாற்றி வாழ்த்த  களப்பணி இனிதே நடைபெற்றது.

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119