பிள்ளையார்பட்டி மகா கும்பாபிஷேம்

35
1168
Advertisement
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் மருதம்பூர்.  இங்கு மூலவராக  கற்பக  விநாயகர் அருள் தருகிறார்.  இக்கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கபட்டு  உள்ளது.  
 
குடைவரைக் கோவிலில் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுக்கு முன்பே பாண்டியர்களால்  அமைக்கபட்ட கோவில் கி.பி. 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டவர் வசமானது.   இன்று வரை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் கோவில் வழிபாடு  நடந்து  வருகிறது.
 
கயமுகா சூரனை கொன்ற பிள்ளையார் தனது பழியை போக்கிக் கொள்ள சிவபெருமானை நோக்கி  தவம் செய்த இடம் பிள்ளையார் பட்டியாகும்.  இங்கு சிவபெருமானை நோக்கி தவம் செய்த  வண்ணம், வடக்கு முகமாகவே பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலிக்கிறார்.  கற்பக விநாயகர்  தனது வலது கையில் ஒரு சிவலிங்க சின்னமும், இடது கரத்தை தனது வயிற்றை சுற்றியுள்ள  கச்சையின் மீதும் வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கிறார்.
 
 இவரது தும்பிக்கை வழஞ்சுழியாக  இருக்கிறது.  மற்றொரு சிறப்பு அம்சம் இவருக்கு முப்பரிநூல் கிடையாது.  விநாயகர் சன்னதிக்கு  எதிர்புறம் அமைந்துள்ள வடக்கு கோபுரவாசல் வழியாக சென்று வழிபட்ட பின்பு கிழக்கு கோபுரவாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு.  விநாயகர் கோபுரத்துக்கு எதிர்புறத்தில்  வெளிபிரகாரத்தின் வட திசையில் விசாலமான திருக்குளம் உள்ளது.  
 
ஒவ்வொரு சதுர்த்தியின்  இரவு நேரத்தில் விநாயகர் மூசிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.  பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பத்து நாள் திருவிழா  நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் தேர்திருவிழா புகழ் பெற்றது.  இங்கு பிள்ளையாருக்கு தனியே  தேர் உள்ளது.  பிள்ளையார் தேரில் இரு வடங்களில் ஒன்றை ஆண்களும், மற்றொன்றை  பெண்களும் இழுத்துச் செல்வார்கள்.
 
மே 1ம் நாள் நடைபெற இருக்கும் பிள்ளையார்பட்டி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற வர்ணபூச்சுக்கள் முடிவடைந்த நிலையில்  அழகுற காட்சியளிக்கும் கோவில்.
 
 
செய்தி : பரமக்குடி முத்துக்குமார்
 
 
Advertisement