சொர்க்க வாசல் திறப்பு: விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!

சொர்க்க வாசல் திறப்பு: விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!
Advertisement
Advertisement

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் திறப்பு: விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு நிகழ்ச்சியாக வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறப்படுகிறது.

பூலோக வைகுண்டமாக கருதப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று (டிச:18) அதிகாலை 5.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக நேற்று மதியத்திலிருந்தே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர்.

சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் ‛ரெங்கா ரெங்கா’ பக்தர்கள் பக்திபரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில், சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில்,

கோவை காரமடை ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட வைணவ தலங்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது. பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.