மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு..!
Advertisement
Advertisement

தமிழகத்தின் மாநில பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் இருக்கிறார்.

இதேபோல் மாநில பாஜக மகளிர் அணித் தலைவியாக மகாலட்சுமி பதவி வகித்து வருகிறார்.

இவர் கடந்த 22ஆம் தேதி மதுரையில் ’தமிழ்மகள் தாமரை மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தி முடித்தார்.

இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், அகில இந்திய மகளிரணித் தலைவி விஜயா ராஹத்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது மதுரை தெப்பக்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தை அடுத்து, வீட்டில் இருந்து அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.

அப்போது கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சேதமடைந்திருந்தது தெரியவந்தது. உடனே தெப்பக்குளம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.