மதுரை சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்கு பதிவு…!

மதுரை சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்கு பதிவு…!
Advertisement
Advertisement

மதுரையில் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 21 தேவர் சமுதாய தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரினை வைக்க வேண்டும்,

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

அரசு பாட புத்தகத்தில் தேவர் வரலாற்றை முழுமையாக அச்சிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதுரை மாவட்டத்தில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும் தேவர் சமுதாய அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மதுரையின் முக்கிய நகர் பகுதியான கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு, 7 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் அனுமதியின்றி போராடடம் நடைபெற்றதால்,

போராட்டத்திற்கு தலைமை வகித்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன்,

மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட 21 தேவர் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் 750 பேர் மீது,

3 பிரிவுகளின் கீழ் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.