போதகர் கொலையாளிகள்…! போலீசார் பிடியில்….

நியாயத்தின் பயணம்

0
4289
Advertisement
Advertisement

தூத்துக்குடி மில்லர்புரம்… போதகர் கனகராஜ்… படு கொலை  வழக்கு பற்றிய பழைய பிளாஷ்பேக் செய்திகளை நாம் தொடர்ந்து “மறந்து போனது” என்ற தலைப்பில்  வெளியீடு செய்தோம் ….! 

அதே நேரத்தில் இந்த வழக்கு  சம்பவங்கள் அறிந்த இன்ஸ்பெக்டர் ஹரிகரனிடம் வழக்கு பற்றிய தற்போதைய விபரம் கேட்ட போது.

hariharan

விரைவில் தெரியும், என்று கைப்பேசியை துண்டித்துக்கொண்டார்.
ஆனால் கைது உறுதியாகிவிட்டது என்பதை நாம் நாசுக்காக செய்திகளை பதிவு செய்தோம்.

பாஸ்ட்டர் கனகராஜ் பரிதாபமாக செத்து போனதற்க்கு காரணம் …..!
விபரீதமான அபச்சாரங்களை நேரில்  பார்த்து  அதிர்ந்து போனதுதான்…!  என்று உறுதியான தகவல்  தான் நமக்கு கிடைத்தது.

pothkar kanakaraj

ஆனால் பத்திரிக்கை செய்திகளில் ஏதோ சப்பைகட்டாக இருக்கிறது என்று சபையின் விசுவாசிகள் நம்மிடம் கவலை தெரிவித்தார்கள்.

வெள்ளை அங்கி விசுவாச ஊழியர்கள் சிலரின் “சில்பா…. சில்லுமிச” விளையாட்டு ஒட்டுமொத்த திருச்சபையின்…. தலை குனிவை உண்டாக்கியிருப்பதில் சந்தேகமே இல்லை .

டைட்டஸ்

அபச்சரங்களுக்கு துணை போனவர்களின் பரிசுத்தத்தை காப்பாற்றுவதில்…அன்றைய ஜான் தாமஸ்  முதல் இன்றைய சூப்பர் பாஸ்டர் செல்லப்பாண்டி வரை படாத பாடு படுபடுவது உண்மை தான் என்றும் கூறினார்கள்..!

எது எப்படியோ திருச்சபையை……!  திருடர்களின் சபையாக மாற்றிய,  வெள்ளைஅங்கியில் டைட்டாகா…. இருந்த இளம் மத  போதகரை….!,
போலீஸ் மோப்பம் பிடித்து டைட்டாக கவனயீர்ப்பு செய்த காரணத்தால்…..! என்று நாம் குறிப்பிட்டபுதிரான பெயர்கள் பற்றிய விபரம்

தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் நாகர்கோவில் டேவிட்டின் மகன் டைட்டஸ்…!

டைட்டஸ்சை போலீஸ் மடக்கி பிடித்தது பிதுக்கு…. பிதுங்கு….. என்று பிதுங்கியதில்…. ஐய்யா…அப்படியே  மெல்ட்டாகி …. டைட் கூட இருந்து குழி பறித்த ஸ்ரீ ராமன் குலத்தவரை என்று நாம் குறிப்பிட்டது, ஸ்ரீராமன் குலம் ரகுவம்சம்.

டைட் போட்டுக்கூடத்தது ….! கோட்டாரையை சேர்ந்த ரகு
வயது 35, டைட்டின் உடன்பிறப்பு, அனகோன்டா…… என்று நாம் குறிப்பிட்ட அண்டோ வயது 29,(இப்போது பெயர் புதிர் வாசகர்களுக்கு புரிந்திருக்கும்)

மேலும் இதில் சில பெண்கள் இருப்பதாக கூடுதல் தகவல் கசிந்து வருகின்றது.

ஒரு பாவமும் அறியாத போதகரை கொலை செய்தசண்டாளர்களை காப்பாற்றுவதில்  இன்றும்  தூத்துக்குடி திருச்சபை தீவிரமாக இருக்கிறது என்கின்ற தகவல் தான்  நமக்கு அதிர்ச்சியாக உள்ளது….!

பார்க்கலாம் நியாயத்தின் பயணம் எப்படி என்று …..!

SHARE