ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்- குஷ்பு…!

ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்- குஷ்பு…!
Advertisement
Advertisement

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்- குஷ்பு…!

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாத பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.
பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ். இன்று அவரும் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார்.
தமிழக மக்களின் எதிர் காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.