அடிப்படை வசதிகள் இல்லாத பரமக்குடி இரயில் நிலையம்…!

286
1144
அடிப்படை வசதிகள் இல்லாத பரமக்குடி இரயில் நிலையம்…!
Advertisement

அடிப்படை வசதிகள் இல்லாத பரமக்குடி இரயில் நிலையம்…!

Advertisement

பரமக்குடி மக்களின் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்கு வகிப்பது இரயில் சேவை., அடிப்படை வசதிகள் இல்லாத பரமக்குடி இரயில் நிலையம்…!

பரமக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதும் இந்த இரயில் சேவை தான்..

இவ்வாறு., மக்கள் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில் நிலையத்தில், 

அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி இல்லை., கழிப்பறை வசதிகள் இல்லை., மாற்றுத் திறனாளிகளுக்கான வீல் சேர் வசதிகள் இல்லை., என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது..,

                                                                               

தினமும் இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் வரத்து அதிகரிக்கும் வண்ணம் உள்ளதால்,

மாவட்டத்தில் அதிக இரயில் பயணத்தை விரும்பும் பயணிகள் உள்ளதாலும்., எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாததால், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நகரின், பல்வேறு பொது நல அமைப்புகள், அரசியல் அமைப்புகள் பலமுறை மனுக்கள் கொடுத்தும்,

கண்டு கொள்ளாத இரயில்வே அதிகாரிகளின் அலட்சியபோக்கால் அதிருப்தி அடைந்துள்ளனர்.,

இனிவரும் காலத்தில் இப்பிரச்சனை தொடரும் எனில் மக்கள் போராட்டமாக மாற வாய்ப்புள்ளதாக இரயில் பயணிகள் பலர் கூறினர்.

செய்திகள்  :- பரமக்குடி முத்துக்குமார்