தேசிய அளவில் சாதனை! பரமக்குடியில் வரவேற்பு!!

65
1221
தேசிய அளவில் சாதனை! பரமக்குடியில் வரவேற்பு!!
Advertisement

தேசிய அளவில் சாதனை! பரமக்குடியில் வரவேற்பு!!

Advertisement

அகில இந்திய அளவில் கிராப்ளிங் (மல்யுத்தம்) போட்டி டெல்லியில் உள்ள சட்டர்சால் மைதானத்தில் கடந்த ஜீலை23 முதல் 29ம் தேதி வரை நடைபெற்றது.  தேசிய அளவில் சாதனை! பரமக்குடியில் வரவேற்பு!!

இப்போட்டியில், தமிழகம் சார்பில் பல்வேறு மாவட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து “மருதம் கிராப்ளிங் கழகம்” சார்பில் 20 மாணவர்கள் பங்கேற்றனர்.

பங்கேற்க 20 மாணவர்களில் 15 பேர் 6-தங்கப்பதக்கம், 5-வெள்ளிப்பதக்கம், 9-வெண்கலப்பதக்கம் வென்று, தமிழகத்திற்க்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அகில இந்திய அளவில் மல்யுத்த விளையாட்டில் தமிழகம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இது, தவிர தங்கம் வென்ற 6 மாணவர்களும், 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற இருக்கும்,

“உலக அளவிலான மல்யுத்த போட்டியில்” இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்று வெற்றியுடன் பரமக்குடி வந்த மாணவர்களை வரவேற்று,

“மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்கத்தினர்” விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

                                         

மாணவர்களுக்கு விருதுகளை பரமக்குடி நகர் காவல்துறை ஆய்வாளர் இராஜேஸ்வரி மற்றும் சார்பு-ஆய்வாளர்கள் வழங்கினர்.

                                                  

மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு தெரிவித்தனர்.

செய்திகள்:- பரமக்குடி முத்துக்குமார்