டி.எஸ்.பி ஆகிறார் ஹர்மான் பிரித் கவுர்..!

0
246
டி.எஸ்.பி ஆகிறார் ஹர்மான் பிரித் கவுர்..!
Advertisement

டி.எஸ்.பி ஆகிறார் ஹர்மான் பிரித் கவுர்..!

Advertisement

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஹர்மான் பிரித் கவுருக்கு,

பஞ்சாப் காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஹர்மான்பிரித் கவுர், உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் 171 ரன்கள் விளாசி மிரட்டினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து 51 ரன்கள் சேர்த்தார்.

அவரது திறனை பாராட்டிய பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தார்.

இதற்கிடையே பஞ்சாப் மாநில காவல்துறையில் ஹர்மான்பிரித் கவுருக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என தந்தை ஹர்மாந்தர் சிங்கிடம், முதல்வர் அமரீந்தர் சிங் உறுதி அளித்துள்ளார்.

ஹர்மான்பிரித் கவுர், பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர், பஞ்சாப் காவல் துறையில் பணிபுரிய ஏற்கெனவே விருப்பம் தெரிவித்ததாக தெரிகிறது.

ஆனால் அப்போதைய அரசு, அவரது கோரிக்கையை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது அவர் விளாசிய அதிரடி ஆட்டங்களுக்காக அவரின் விருப்பம் நிறைவேறியுள்ளது..

செய்திகள்: கவின்