ஏழு தலைமுறை பாவம் நீங்க….! எறும்புக்கு தர்மம்…!

ஏழு தலைமுறை பாவம் நீங்க....! எறும்புக்கு தர்மம்...!
Advertisement
Advertisement

ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும் இந்த தலைமுறையில் நாம் செய்த தெரிந்த பாவம்,

தெரியாத பாவம், அறிந்த பாவம், அறியாத பாவம், வாயால் பேசிய பாவங்கள்  அனைத்தும் தீருவதற்கு,

சனிக் கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு,

விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி அந்த அரிசியை விநாயகரைச் சுற்றி போட்டால் அதை எறும்பு சாப்பிட்டுவிடும்.

அப்பொழுது அனைத்து பாவங்களும் போய்விடும். எப்படி என்றால், ஒரு மனிதனை யானை மிதித்து தாண்டி இரண்டடி தூரம் போய் பார்த்தால் மனிதன் நசுங்கி விடுவான்.

நமக்கு யானை எவ்வளவு பெரியதாக தெரிகின்றதோ அதே போல்தான் எறும்புக்கு நாம் மிகப் பெரிய உருவமாக தெரிவோம்.

ஆனால் நாம் எறும்பை மிதித்து இரண்டடி தூரம் போய் பார்த்தால்  எறும்பு எழுந்து ஊர்ந்து போய்க் கொண்டு இருக்கும்.

தீய சக்திகள் எது பட்டாலும் அது சாகாது. மனிதன் இரண்டு நசுக்கு நசுக்கினால்மட்டுமே சாகும்.

நாம் அதற்கு பச்சரிசியை உணவாக கொடுத்தால் நம்மிடம் உள்ள பாவங்களும் பீடைகளும் போய்விடும்.

அது எவ்வாறெனில் எறும்புகள் நாம் போட்ட பச்சரிசியை உடனே சாப்பிடுவதில்லை.

அதை தன் கூட்டிற்கு கொண்டு போய் மழைக் காலத்தில் வைத்து சாப்பிடுவதற்கு வைத்துக் கொள்ளும்.

மேலும், இவ்வாறு அரிசியை எடுத்து சேமித்து வைத்துக்  கொள்ளும். இதனை சாப்பிடுவதற்கு இரண்டேகால் வருடம் ஆகும்.

அதனுடைய எச்சில் பட்ட உடனே அந்த அரிசியும் எப்பவும் கெட்டுப் போகாமல்  புது அரிசி போல இருக்கும்.
இதை நாம் கண்கூடாக காணலாம்.

இரண்டேகால் வருடம் அந்த எறும்புக் கூட்டில் பச்சரிசி இருப்பதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.

அந்த கிரக நிலை மாறியவுடன் அதன் வலு இழந்து போய் விடும். இதையெல்லம் அறிந்த முன்னோர்கள் எறும்புக்கு அரிசியை உணவாக போடுங்கள் என்றார்கள்.

ஏன் அவ்வாறு கூறினார்கள் என்றால் ஒர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்கு அர்த்தம்.

இதனால் தான் பச்சரிசி கோலங்கள் போடுங்கள் என்று கூறினார்கள்.

ஏன் என்றால் நாம் போட்ட அரிசி இரண்டேகால் வருடத்திற்கு அதன் கூட்டில் இருக்காது.

நமக்கு இரண்டே கால் வருடத்திற்கு எந்த கஷ்டமும்  இல்லாமல் நிம்மதியாக இருப்போம்.

எப்படி என்றால் நாம் எறும்புக்கு படி அளந்த அரிசி அதன் கூட்டில் இருக்கும்.

சனி பகவான் நமக்கு படி அளக்காமல் இருந்தால் முப்பத்தி முக்கோடி தேவர்களும், அவன் எறும்புக்கு படி அளந்த உணவு அதன் கூட்டில் உள்ளது.

ஆதலால் நீ அவனுக்கு எந்த கஷ்டமும் கொடுக்கக் கூடாது என்று முப்பத்தி முக்கோடி தேவர்களும் கூறிவிடுவார்கள்.

ஆறு மாதத்திற்கு முன்னே சனி பகவான் வலு இழந்து விடும். கிரக நிலை மாறிவிடும்.

ஆதலால் இறைவன் நமக்கு தினமும் படி அளந்து எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்.

இந்த பதிவை பார்த்தாவது அனைவரும் வீட்டிற்கு முன்பு பச்சரிசி மாவினால் கோலங்கள் போடுவீர்கள் என்று முழுமையாக நம்புகிறோம்…!

தொகுப்பு :- சங்கரமூர்த்தி
7373141119