பிபாசா பாபு இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை

325
1037
Advertisement

பிபாசா பாபு

Advertisement

நடிகைகள் வயதாகியும் திருமணம் செய்யவில்லை என்றால் ஏன் இன்னும் செய்யவில்லை என்பார்கள். ஆப்படி திருமணம் முடிந்துவிட்டால் குழந்தை எப்போது என்பார்கள்.

அப்படிதான் அண்மையில் நடிகர் கரன் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை பிபாசா பாசு. கடந்த வருடம் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் பிபாசா பாபு கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

நடிகை இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் நான் கர்ப்பமாக இல்லை, மிகவும் நல்ல செய்தி ஆனால் உண்மை இல்லை.

இப்போதைக்கு குழந்தை பற்றி எந்த எண்ணமும் எங்களிடம் இல்லை. அப்படி நடந்தால் கண்டிப்பாக நானே உங்களுக்கு அறிவிப்பேன் என கூறியுள்ளார்.