18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை…!

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை...!
Advertisement
Advertisement

18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது

18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் , 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை கோரி ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் கிளை, 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் கமிஷன் மற்றும் 18 எம்எல்ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 4 ம் தேதி 18 எம்எல்ஏ.,க்கள், தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை.

இந்த வழக்கு, இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.