பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் விலங்குகளை பயன்படுத்த தடை..!

0
109
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் விலங்குகளை பயன்படுத்த தடை..!
Advertisement
Advertisement

சர்க்கஸ் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் அனைத்து விலங்குகளையும் பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக புதிய சட்ட வரைவு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

சர்க்கஸ் போன் நிகழ்ச்சிகளில் சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குதிரை, குரங்கு, யானை, நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை பயன்படுத்தவும் தற்போது தடை கொண்டு வரப்பட உள்ளது.

இதனால் இனி சர்க்கஸ்களில் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பவர்களுக்கு இனி வேலையில்லாமல் போகும் நிலை ஏற்படும்.

சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளில் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பதால் அவைகள் துன்பறுத்தப்படுகின்றன.

இதனால் விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் எந்த நிகழ்ச்சிகள் அல்லது கண்காட்சி, சர்க்கஸ், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இனி எந்த விலங்குகளையும் பயன்படுத்த கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.