புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது – புயலாக மாறுமா?

புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா?
Advertisement
Advertisement

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகியிருக்கிறது.

இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களைச் சூறையாடிக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து உருவான காற்றழுத்தத் தாழ்வு அழுத்தத்தினால் வடதமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மழை பெய்தது.

தற்போது தெற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

காற்றழுத்தத் தாழ்வு மையத்தின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்து வரும் தினங்களைப் பொறுத்தே கணிக்க முடியும்.

அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தாழ்வுப் பகுதி வலுவடையும் பட்சத்தில் புயல் சின்னமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இது வலுப்பெறும் பட்சத்தில் 12-ம் தேதி புயலாக மாறும், 13-  தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா மற்றும் வட தமிழகக் கடற்கரை நோக்கி நகரும்.

16-ம் தேதி சென்னை – விசாகப்பட்டினத்துக்கு இடையே நெல்லூரில் கரையைக் கடக்கும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மையம் புயலாக மாறும் பட்சத்தில் ‘பெய்ட்டி’ என்று தாய்லாந்து பெயர் சூட்டியிருக்கிறது.