புதிய கூட்டணியுடன் நிதீஷ்குமார் பதவியேற்பு…!

28
556
புதிய கூட்டணியுடன் நிதீஷ்குமார் பதவியேற்பு…!
Advertisement

புதிய கூட்டணியுடன் நிதீஷ்குமார் பதவியேற்பு…!

Advertisement

சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, லாலு பிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால்,

பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து பீகார் கவர்னர் திரிபாதியை சந்தித்து ஆட்சியமைக்க நிதிஷ் உரிமை கோரினார்.

132 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு பட்டியலையும் அளித்தார்.

இந்நிலையில் இன்று(ஜூலை 27) மாலை 5 மணிக்கு முதல்வராக நிதிஷ் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை 10 மணிக்கே முதல்வர் பதவியேற்க உள்ளார்.

இதனை பா.ஜ., மாநிலத் தலைவர் சுஷில் மோடி தெரிவித்தூள்ளார். மேலும் நிதிஷ்குமார், சுஷில் மோடி ஆகிய இருவர் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளனர்.

முன்னதாக லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி இன்று காலை 11 மணிக்கு கவர்னரை சந்திக்க இருந்த்தாக கூறப்படுகிறது.

செய்திகள்: ரோகிணி