நவராத்திரி விழாவை தமிழ்செய்தியுடன் கொண்டாட ரெடியா..!

87
790
நவராத்திரி விழாவை தமிழ்செய்தியுடன் கொண்டாட ரெடியா..!
Advertisement

நவராத்திரி விழாவை தமிழ்செய்தியுடன் கொண்டாட ரெடியா..!

Advertisement

ஓரறிவு கொண்ட புழுவாக பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம். நவராத்திரி விழாவை தமிழ்செய்தியுடன் கொண்டாட ரெடியா..!

நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது.

ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கடைபிடிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி விரதமாகும்.

உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.

இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்ளுகின்றோம்

நவராத்திரி பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும்,

கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி,

இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறும் நன்னாள் இது.

நவராத்திரி முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும்.

இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

இந்த வருடம் உங்கள் வீட்டின் நவராத்திரி விழாவை எங்கள் தமிழ் செய்தியுடன் இணைந்து கொண்டாடுங்கள்..

உங்கள் வீட்டின் கொழுவையும், சிறுவர், சிறுமிகளின் சுட்டிதனங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் 7373141119 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்..

உங்கள் நவராத்திரி கொழுவை காண நமது தமிழ்செய்தி குழுவும் காத்திருக்கிறது.