கச்சத்தீவில் தேசியக் கொடியேற்றும் போராட்டம்..!

40
553
கச்சத்தீவில் தேசியக் கொடியேற்றும் போராட்டம்..!
Advertisement

கச்சத்தீவில் தேசியக் கொடியேற்றும் போராட்டம்..!

Advertisement

சுதந்திர தினத்தன்று கச்சத்தீவில் தேசியக் கொடியேற்றும் போராட்டம் நடைபெறும் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. கச்சத்தீவில் தேசியக் கொடியேற்றும் போராட்டம்..!

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மீனவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன.

கச்சத்தீவு பகுதியில் சீனா ராணுவ முகாம் அமைத்துள்ளதால், நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதால் இந்திய மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புக்கே மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவில் உள்ள உரிமையை நிலைநாட்டும் வகையிலும்,

தேசப் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் ஆகஸ்ட் 15-ம் தேதி கச்சத் தீவில் தேசியக் கொடியேற்றி போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகள்: கவின்