சூரிய குடும்பத்துக்கு வெளியே மூன்றாவது புதிய கோள்!

சூரிய குடும்பத்துக்கு வெளியே மூன்றாவது புதிய கோள்!
Advertisement
Advertisement

சூரியக் குடும்பத்துக்கு வெளியே இருக்கும் கோள்களுக்கு எக்ஸோ ப்ளானட் என்று பெயர்.

இந்த எக்ஸோ ப்ளானட்களின் இருப்பிடம் பற்றிய ஆராய்ச்சிக்காக 2018-ம் ஆண்டு ஏப்ரலில் டெஸ் (TESS) செயற்கைக் கோளை நாசா விண்ணில் செலுத்தியது.

இரவு வானத்தைக் கழுகுபோல் கண்காணித்து தற்போது மூன்றாவது கோளைக் கண்டறிந்துள்ளது டெஸ்.

அமெரிக்க விண்வெளிக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அறிவியல் அறிஞர்கள் இதை அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் புதிய எக்ஸோ ப்ளானட்டுக்கு ஹெச்டி 21749பி (HD 21749B) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நம் பூமியிலிருந்து 53 ஒளியாண்டுகள் (கிட்டத்தட்ட 501.38 டிரில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் உள்ள பிரகாசமான ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இந்த எக்ஸோ ப்ளானட்.

இதன் மேற்பரப்பு 300 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் எனவும் சூரியனைப் போல பிரகாசமுடைய அதன் நட்சத்திரத்தோடு ஒப்பிட்டால்,

இந்தக் கோள் குளிர்ச்சியானதே எனவும் மஸாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் புது எக்ஸோ ப்ளானட் தன் நட்சத்திரத்தைச் சுற்றி வர 36 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

ஏற்கெனவே கண்டறிந்த எக்ஸோ ப்ளானட்களான பை மென்சே பி (PI MENSE B) ஆனது 6.3 நாள்களிலும் LHS 38446 ஆனது 11 மணி நேரத்தில் தங்கள் நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்றன.

நம் பூமியைவிட மூன்று மடங்கு பெரிதான இந்தக் கோளில் பாறைகள் மட்டுமே இருப்பதால் ஏதேனும் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“நெப்டியூன், யுரேனஸ் போல முழுக்க வாயுக்கள் இந்தக் கோளில்  காணப்படவில்லை.

அதைவிட அடர்த்தியானச் சுற்றுப்புறம் அல்லது தண்ணீரின் அடர்த்தியைக் கொண்டிருக்கலாம்” என்கிறார் ஆராய்ச்சியாளர் ட்ரகோமிர்.