23 மொழிகளில் வெளியாகும் நரேந்திர மோடி…!

23 மொழிகளில் வெளியாகும் நரேந்திர மோடி...!
Advertisement
Advertisement

பாலிவுட்டில் தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்,23 மொழிகளில் வெளியாகும் நரேந்திர மோடி…!

சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோரது வாழ்க்கை வரலாற்று படங்கள் தயாராகி வருகின்றன.

இவற்றில் தாக்ரே படமும், மன்மோகன் சிங் வாழ்க்கை படமும் இந்தமாதம் ரிலீஸாகின்றன.

இதையடுத்து, தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் படமாக தயாராகிறது.

மோடியாக விவேகம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். ஓமங் குமார் இயக்குகிறார்.

சுரேஷ் ஓபராய், சந்திப் சிங் தயாரிக்கிறார்கள். லெஜண்ட் குளோபல் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மும்பையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிடப்பட்டார்.

இதில் விவேக் ஓபராய், நரேந்திரமோடி தோற்றத்தில் இருக்கும் படம் இடம் பெற்றிருந்தது.

படம் ஹிந்தியில் தயாரானாலும், ஆங்கிலம், குஜராத்தி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் 23 மொழிகளில் நரேந்திர மோடி படம் வெளியாகிறது.