நமது எம்ஜிஆர் சித்திரகுப்தனை கவர்ந்திழுக்கும் முரசொலி…

33
659
Advertisement
Advertisement

ஒற்றரும்…… தோழரும்….

எனக்கு பின்னும் நூறாண்டு வாழுமென்று சொன்ன ஜெ யின் எண்ணத்தில் மண்ணை போடும் அதிமுக வினர். எதிரிகள் அல்ல இந்த அதிகாரபசிகொண்ட அற்பர்களாலே அதிமுக அழிகிறது என்று ஓவென்று அழுதார் உண்மை தொண்டர் என்றார் ஒற்றர்.

அட போங்க…அந்த அம்மாவால் பாராட்டப்பட்ட சித்ரகுப்தனை தூக்கிஎறிந்தது மன்னார்குடி கும்பல்,அதைவிட கொடுமை சித்திரகுப்தனின் எழுத்தை காசுக்கு விலை பேசுகிறது எடப்பாடி கும்பல் என்றார் தோழர்.

இடைத்தேர்தல்யார் அந்த சித்திரகுப்தன்…அந்த அம்மாவிற்கும் அவருக்குமான புரிதல் என்னவென்று தெரியாத மூடர் ௯ட்டம்… ஒற்றரே…சித்திரகுப்தனை பற்றி உமக்கு தெரிந்ததை ௯றுங்கள்….

ஒன்பது ஆண்டுகள் நமது எம்ஜிஆரின் ஆசிரியர்.சித்ரகுப்தன் என்ற புனைப்பெயரில் கவிதை புனையும் மருது அழகுராஜ். ஒவ்வொரு கவிதைகளை அந்த அம்மாவே ரசித்து படிக்குமாம் தோழரே… பதினான்கு பேருக்கு வழங்கும் தமிழ் விருதில் முதல் விருதான உ.வே.சா விருதிற்கு தன் கையாலே மருதுவின் அந்த அம்மாவே எழுதி தேர்ந்தெடுத்தாராம் ஒற்றரே…

அதுமட்டும்ல…உலக தமிழ் மாநாட்டிற்கு அப்போதைய அமைச்சர் வைகைசெல்வன்,ராஜாராம் ஐஏஎஸ் பட்டியலில் மருதுஅழகுராஜின் பெயரை இணைத்தவர் ஜெயலலிதா தான் தோழரே….

அப்படிப்பட்ட சித்ரகுப்தனை காவி அடி…கழகத்தை அழி..என்ற ஒற்றை கவிதைக்காக நமது எம்ஜிஆரின் ஆசியர் பணியிலிருந்து வெளியே எறிந்து பாஜகா வின் மிரட்டலுக்கு பயந்து பணிந்தாராம் தினகரன்…

எக்காலும் பாஜகாவை தமிழகத்திற்குள் வளர விடமாட்டேன் என்ற அந்த அசாத்திய பெண்மணியின் கட்சி இன்று அதே கட்சிக்கு அடிமைகளாக மாறிவிட்டன….. தினகரன் தூக்கிஎறிந்த ஜெயின் பொக்கிசமான சித்ரகுப்தனை எடப்பாடி ௯ட்டம் ஆரத்தழுவும் என்று நினைத்தால்….

என்ன நடத்தது எழுத்து நெருப்பிற்கு விலைபேசுகிறார்களாம் இரவல் வாழ்வை வாழும் எடப்பாடி கும்பல்… இவர்களுக்கெல்லாம் இப்போது அம்மாவெல்லாம் சும்மா…பதவி க்கு மட்டுமே அம்மா…

திமுக எம்.எல்.ஏ க்கள் அவசர கூட்டம்..!

தூக்கி எறிந்த பொக்கிசத்தை தாங்கிபிடிக்க தயாராக இருக்கிறதாம் முரசொலி…. தமிழாலே ஆட்சியை பிடித்த திமுகா விற்குத்தான் சித்திரகுப்தன் தமிழின் வீச்சு புரிந்திருக்கிறது.

ஒற்றை கவிதையால் பாரத தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த சித்ரகுப்தனை தமிழோடு வாருங்கள் என திமுக வரவேற்க காத்திருக்கிறதாம். என்ன முடிவு எடுக்க என மருது குழப்பத்தில் உள்ளாராம் என்று ௯றிவிட்டு மறைந்தார் ஒற்றர்.