முப்பரிமாணம் திரைவிமர்சனம்

47
1060
திரைவிமர்சனம்
Advertisement
Advertisement

முப்பரிமானம் திரைவிமர்சனம் 

இப்போதெல்லாம் புதுமுக இயக்குனர்களுக்கும் நல்ல காலம் என்றே சொல்லலாம். சினிமாவில் அவர்களுக்கும் நல்ல காலம் இருக்கிறது. படங்களுக்கும் உடனே வரவேற்பு கிடைக்கிறது.

இயக்குனர் அதிரூபன் முப்பரிமாணம் என்ற பெயர் போலவே பரிமாணிக்கும் படி கதை கொடுத்திருக்கிறாரா என பார்ப்போம்.

கதைக்களம்

கதிர் என்னும் பெயரில் ஒரு போலீஸ் அதிகாரியின் மகனாக ஹீரோ சாந்தனுவும், அனு கேரக்டரில் ஆள்பலம் மிக்க முக்கிய புள்ளியின் மகளாக சிருஷ்டி டாங்கேவும் நடித்திருக்கிறார்கள்.

சிறு வயது முதலே நட்பாக இருக்கும் இவர்கள் அப்போதே பிரிவை சந்திக்கிறார்கள்.

சிருஷ்டியின் சித்தப்பாவாக நடித்திருக்கும் ரவிபிரகாஷ் படத்தின் முக்கிய வில்லன்.

காதலை வெறுக்கும் இவர் தன் தங்கை மற்றும் அவரது காதலரை கொலை செய்துவிட்டு, தான் கல்யாண கோலத்தில் இருக்கும் போதே 10 வருடங்கள் சிறை செல்கிறார்.

கைது செய்ய காரணமாக இருந்த சாந்தனுவின் அப்பாவை பழிவாங்க நினைக்கிறார் வில்லன்.

தன் அண்ணன் மகளான சிருஷ்டி சாந்தனுவுடன் காதல் வலையில் விழ வில்லன் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.

மருத்துவ கல்லூரி மாணவியாக இருக்கும் சிருஷ்டிக்கு சந்தோஷ் என்ற பெயரில் நடிகராக இருக்கும் ஸ்கந்தா அசோக்கிடம் நட்பு ஏற்பட பின் திருமணத்தில் வந்து நிற்கிறது. சாந்தனு மண்டபத்திற்குள் நுழைந்து சிருஷ்டியை கடத்த மோதல் உருவெடுக்கிறது.

வில்லனிடமிருந்து சாந்தனு தப்பினாரா, காதலில் ஜெயித்தாரா என்பதே படத்தின் முழுக்கதை.

சிருஷ்டியின் உண்மையான சுயரூபம் தெரியவர இரண்டாம் பாதி சூடுபிடிக்கிறது.

தன் காதலை புரியவைக்க நினைக்கும் சாந்தனு வில்லனிடமிருந்து தப்பினாரா, காதலியை கரம் பிடித்தாரா இல்லை, ஹீரோயின் நடிகருடன் திருமணத்தை முடித்துகொண்டாரா என நிறைவாகிறது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி.

படத்தை பற்றிய அலசல்

சாந்தனு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும் பெரியளவில் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்த வருடத்தில் 2வது படமான இது அவருக்கு கைகொடுக்கும் என்பது அவரது நம்பிக்கை. வெறும் காதல் செய்யாமல் இந்த படத்தில் ஆக்‌ஷனிலும் இறங்கியிருப்பது அவருக்கு ஓகே.

சிருஷ்டி சாந்தனுவுக்கு ஜூனியர் என்றாலும் அதிகமான படங்களில் நடித்து சீனியராகி விட்டார்.

இந்த படத்தில் அவர் நடித்திருக்கும் விதம் இன்னும் பல பட வாய்ப்புகளை கொடுக்கலாம். வில்லி கேரக்டர் வந்தாலும் ஆட்சேபனைக்கு இல்லை.

வில்லன் ரவி பிரகாஷை பல படங்களில் பார்த்திருப்பீர்கள்.

ஹீரோமாதிரி தெரிந்தாலும் டீசண்ட்டான வில்லனாக கலக்குகிறார்.

போலிஸ் அதிகாரியாக இவர் நடித்தல் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

அடுத்து கன்னட நடிகர் ஸ்கந்தா அசோக் சாருலதா படத்திற்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

அஜித் போன்ற இவரின் தோற்றமும், எந்த விழாவிலும் கலந்துகொள்வதில்லை என அஜித் பாலிசியையும் சொல்வது ரசிக்கவைக்கிறது.

படத்தின் இரண்டாவது ஹீரோ என்றே சொல்லலாம்.

கிளாப்ஸ்

சாந்தனுவின் நடிப்பு பரிணமிக்கிறது. வில்லன் பார்வையாலே மிரட்டுகிறார். சிருஷ்டி இப்படியும் நடிக்கமுடியுமா என அசரவைக்கிறார்.

பண ஆசைக்காக உண்மைக்காதலை தூக்கி எறிந்துவிட்டு பின் எதுவும் கிடைக்காமல் போகும் விசயத்தை தெளிவாக புரிய வைத்திருக்கிறார் புதுமுக இயகுனர் அதிரூபன்.

கூடவே இருக்கும் அப்புகுட்டி, சாமிநாதனை விட ஒரு சில காட்சியில் வந்துபோகும் ராமையா காமெடியில் ஸ்கோர் செய்கிறார்.

பல்ப்ஸ்

கொஞ்சம் டிவிஸ்ட், ஃபிளாஷ் பேக்கை குறைத்திருக்கலாம். பாடல்கள் பெரியதாக இல்லை. ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றமே. காமெடி இன்னும் கொஞ்சம் வைத்திருக்கலாம்