ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட தோனி..!

ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட தோனி..!
Advertisement
இந்தியா, நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடா் நேற்று நிறைவு பெற்ற நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைத் தொடா்ந்து இந்தியா, நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடா் நேற்று நிறைவு பெற்றது.
இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின்னா் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இந்நிலையில் சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வீரா்கள் தரவரிசைப் பட்டியலில் கேப்டன் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரோகித் ஷா்மா 854 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனா்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடா்ந்து 3 அரைசதங்களை அடித்த மகேந்திர சிங் தோனி 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 17வது இடத்தை பிடித்துள்ளாா்.

அதே போன்று பந்துவீச்சாளா்கள் பட்டியலில் இந்திய அணியின் பும்ரா 808 புள்ளிகளுடன் தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளாா்.
குல்தீப் யாதவ் 4வது இடத்திற்கும், சாஹல் 5வது இடத்திற்கும் மாற்றம் கண்டுள்ளனா்.

அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி ஒரு இடம் முன்னேற்றம் கண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி தொடா்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.