பறக்கும்படை சோதனை தீவிரம்..!

பறக்கும்படை சோதனை தீவிரம்..!
Advertisement
Advertisement

சேலம் ஆத்தூரில் ஆவணங்கள் இல்லாமல் லட்சக் கணக்கில் பணம் கொண்டு சென்ற நபரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் தேதி வெளியானதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் எசனை (லத்துவாடி ) பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்தனர். காரல்மார்க்ஸ் என்பவர் காரில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 200 ரூபாய் கொண்டு சென்றார்.

அவரிடம்  போதிய ஆவணங்கள் இல்லாததால்  அவரிடமிருந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்