மோடியின் கன்னியாகுமரி பயண தேதி மாற்றம்…!

0
100
மோடியின் கன்னியாகுமரி பயண தேதி மாற்றம்...!
Advertisement
Advertisement

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பிப்., 19க்கு பதில் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறி உள்ளார்.

கடந்த ஜன.,27 ல் மதுரை வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.

பின்னர், பா.ஜ., பொது கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.,10)ல் திருப்பூர் வந்த பிரதமர் மோடி,

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்த பின்னர், மற்றொரு தனி மேடையில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, வரும் 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதாகவும், அப்போது, வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் குமரி வருகையில், மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறி உள்ளார்.

மேலும், 19ம் தேதிக்கு பதில், மார்ச் 1ம் தேதி பிரதமர் கன்னியாகுமரி வர உள்ளதாக கூறி உள்ளார் என தெரிவித்தார்.