பொய்களால் நம்பகதன்மையை இழந்து விட்டார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி..!

0
112
பொய்களால் நம்பகதன்மையை இழந்து விட்டார் பிரதமர் மோடி - ராகுல் காந்தி..!
Advertisement
Advertisement

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டெல்லியில் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு இன்று 12 மணி நேர அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த போராட்டத்திற்கு நேரில் சென்று  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்., மஜித் மேமன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சென்ற காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போது பேசிய ராகுல் காந்தி,

தாம் ஆந்திர மக்களின் பக்கமே நிற்பதாக கூறினார். ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமர் மோடி தவறிவிட்டதாக சாடினார்.

எப்படிப்பட்ட பிரதமர் இவர் என வினவிய அவர், செல்லும் இடமெல்லாம் பொய் பேசும் பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம் என்றார்.

தன்னை காவலன் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் கள்வனாக மாறியுள்ளார்.

ஆந்திர மக்களிடமிருந்து பணத்தை களவாடி அதனை அனில் அம்பானியிடம் வழங்கியுள்ளார். இது தான் உண்மை. இது அனைவருக்கும் தெரியும்.

எனவே எதிர்கட்சியாக இருக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா ஆட்சியையும், பிரதமர் மோடியையும் வீழ்த்த போகிறோம் என்றார்.

மேலும் பேசிய ராகுல், தொடர் பொய்களால் பிரதமர் மோடி, நம்பகதன்மையை இழந்து விட்டார் என்றார்.

பாதுகாப்பு துறையின் ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் ஊழல் எதிர்ப்பு விதிகள் உள்ளன.

இந்த விதிகளை பிரதமர் நீக்கி உள்ளது ஆங்கில செய்தி ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

ரபேல் ஒப்பந்தத்தில் பெரிய திருட்டுக்கு பிரதமர் வழிவகுத்து கொடுத்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.