மோடிக்கு சியோல் அமைதி பரிசு..!

மோடிக்கு சியோல் அமைதி பரிசு..!
Advertisement
Advertisement

சியோலில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன் ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மெர்கல் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

விருதினை பெற்றுக் கொண்ட பின்னர் பேசிய மோடி, இந்த விருது தனிப்பட முறையில் எனக்கு அளிக்கப்பட்டது அல்ல. இந்திய மக்களுக்கு கொடுக்கப்பட்ட விருது.

கடந்த 5 ஆண்டுகளில் 130 கோடி இந்திய மக்கள் திறமையால் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசு.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடி வரும் சமயத்தில் இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய மக்களின் அடிப்படை தத்துவங்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக இந்த விருதினை கருதுகிறேன்.

காந்தியின் போதனைகளின் அடிப்படையிலேயே எங்களின் பணிகளை தொடர்கிறோம். இந்த விருதின் மூலம் கிடைத்த நிதியை தூய்மை கங்கை பணிக்காக பயன்படுத்த உள்ளோம்.

1988 ம் ஆண்டு சியோலில் ஒலிம்பிக் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் அல் குவைதா அமைப்பு துவங்கப்பட்டது.

ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் விரைவில் அமைதி பரவும்.

உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

பகவத் கீதை ஸ்லோகங்களை சுட்டிக்காட்டி அமைதி குறித்து மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.