கோவையில் நவீன கால ஓவிய கண்காட்சி…!

0
103
கோவையில் நவீன கால ஓவிய கண்காட்சி...!
Advertisement
Advertisement

பஞ்ச சித்ரா அகாடமி ஆப் ஆர்ட் சார்பாக பிரபல நவீன உலக ஓவிய மேதை R.B.பாஸ்கரன் கலை படைப்பில் உருவான,

ஓவியங்களின் ஓவிய கண்காட்சி அவிநாசி ரோட்டிலுள்ள ஜென்னீஸ் ரெசிடென்சி ஓட்டல் வளாகத்தில் உள்ள ஆர்ட் ஹவுசில் துவங்கியது.

ஜென்னிஸ் ஓட்டல் குழும தலைவர் வின்சென்ட் அடைக்கல் ராஜ் முன்னிலையில் நடைபெற்ற துவக்க விழாவில் நடிகர் சிவக்குமார் துவக்கி ஓவிய கண்காட்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர்,பல்வேறு காலகட்டங்களை தாண்டி ஓவியக்கலை வளர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,

எனது நீண்ட கால நண்பரும்,நவீன ஓவியக் கலைஞரான பாஸ்கரன் கைவண்ணத்தில் உருவான கலைப்படைப்புகளுக்கான கண்காட்சியை துவக்கி வைப்பதில் தாம் மிக்க மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்தார்.

இன்று துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், ‘அக்ராலிக், ‘ஆயில் பெயின்டிங்’, ‘டிராயிங் டிரை பேஸ்டல் ஆன் பேப்பர்’ உள்ளிட்ட பிரிவுகளில், 50 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நவீன மற்றும் அரிய வகை ஓவியங்களை காட்சிபடுத்தி உள்ள இந்த ஓவிய கண்காட்சியை காலை, 11.00 முதல் மாலை, 7.00 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என பஞ்ச சித்ரா அகாடமி ஆப் கலைக்கூடத்தின் முதன்மை இயக்குனர் பருதி ஞானம் தெரிவித்துள்ளார்.