இடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…!

0
104
இடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்...!
Advertisement
Advertisement

எம்பி தேர்தல் மட்டுமில்லை.. வரப்போகும் சட்டசபை இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலில் கமல் போட்டியிடுவாரா? மாட்டாரா என்ற கேள்வி எழுந்து வந்தநிலையில், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்தார் கமல்ஹாசன்.

இதையடுத்து கட்சி சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கட்சிக்கான தேர்தல் சின்னமாக டார்ச் லைட்டும் கிடைத்துள்ளது.

21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதை பற்றிய அறிவிப்பினை இதுவரை கமல் சொல்லவில்லை.

இதனால் வெறும் எம்பி தேர்தலில் மட்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மய்யம் போட்டியிடும் என்றும்,இதற்கு விருப்ப மனு அளிப்பவர்கள் 10 ஆயிரம் ரூபாய் டிமாண்ட் டிராப்ட் செலுத்தி பெற்று கொள்ளலாம் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விருப்ப மனுக்களை இன்று முதல் பெறலாம் என்றும் மனுக்களை விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டசபை இடைத் தேர்தலிலும் கமல் கட்சி போட்டியிடுவதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.