நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது: ஸ்டாலின்..!

நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது: ஸ்டாலின்..!
Advertisement
Advertisement

சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது.

அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

வரும் லோக்சபா தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்தியிலும் மாநிலத்திலும் முறையான ஆட்சி நடக்காததால் நாடு குட்டிச்சுவர் ஆகி விட்டது என பேசினார்.