திமுக தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஸ்டாலின்…!

திமுக தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஸ்டாலின்...!
Advertisement
Advertisement

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- திமுக தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஸ்டாலின்…! 

‘தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு!’ ‘உங்கள் எண்ணங்களும் அரசேற அரிய தருணம்.

உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொண்டு எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள்.

அடிமை அரசால் வளர்ச்சி என்கிற பாதையில் அதள பாதாளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை முன்னேற்றுவதில், உங்களுடைய கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.

உங்களுடைய கருத்துகளை எங்களுக்கு அனுப்ப dmkmanifesto2019@dmk.in இந்தப் பதிவின் கீழும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

அதே போல், #DMKmanifesto2019 என்கிற #டேக்கிலும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யலாம். வருகிற 28-ந்தேதி வரை அனுப்பலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.