அறிவாலயம் போலாமா…! அன்பழகனின் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்…!

அறிவாலயம் போலாமா...! அன்பழகனின் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்...!
Advertisement
Advertisement

அறிவாலயம் போலாமா?.. என்று பேராசிரியர் அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்து கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

திமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளர் க.அன்பழகன். இவருக்கு இப்போது வயது 97 ஆகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெடுங்கால நண்பராவார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து கொண்ட அன்பழகன், இப்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், பல கட்சி பணிகளுக்கு இடையிலேயும் ஸ்டாலின் இன்று பேராசிரியரை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.

இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில் அன்பழகன் சேரில் உட்கார்ந்திருக்கிறார்.

அவர் அருகில் ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அன்பழகனின் கையை பிடித்து கொண்ட ஸ்டாலின் அவரிடம் குனிந்து, “அறிவாலயம் போலாமா.. அறிவாலயம்..” என கேட்கிறார். அதற்கு பேராசிரியர் கையசைத்து பதில் சொல்கிறார்.

ஸ்டாலின் சொன்னதை காதில் கேட்டு, புரிந்து கொண்டு பேராசிரியர் பதில் சொன்னதால் துரைமுருகன் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் சிரிக்கிறார்கள். இந்த வீடியோ திமுக தரப்பில் படுவைரலாகி வருகிறது.