ஸ்டாலின் வடிவேலு போல செயல்படுகிறார்: செல்லூர் ராஜூ..!

0
112
ஸ்டாலின் வடிவேலு போல செயல்படுகிறார்: செல்லூர் ராஜூ..!
Advertisement
Advertisement

மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி செலவில், 40 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில்,

கூடுதலாக உள்நோயாளிகளுக்கு 40 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் அடிக்கல் நாட்டும் விழா ரூ.1.50 கோடி செலவில் நடைபெற்றது.

இந்த விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்,

மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பா.ஜ.க கூட்டணி பற்றி பேசியது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அமைச்சர்கள் எந்த ஒரு கருத்தும் கூறலாம். ஆனால் முடிவு என்பது அதிமுக தலைமை முடிவு செய்யும்.

அதிமுகவில் சமீப காலங்களாக உட்கட்சி ஜனநாயகம் அதிகமாக உள்ளது. அதிகமாக அமைச்சர்கள் உள்பட பலர் பல்வேறு கருத்துகள் கூறுகின்றனர் என பதிலளித்தார்.

மேலும் ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருக்கிறார். இதனால் நடிகர் வடிவேல் போல் செயல்படுகிறார்.
அவர் ஊராக கிராம சபை கூட்டம் என்று கூறுகிறார். ஆனால் பொதுமக்கள் யாரும் இல்லை, கட்சிக்காரர்கள் தான் உள்ளனர்.

அதிமுக 40 தொகுதியிலும் தனித்து போட்டியிட கூடிய வகையில் தான் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக கட்சியில் தேர்தல் பணிக்கான உயர்மட்ட குழு அமைத்து அதன்படி தான் செயல்பட முடியும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து ஏற்பட்ட இடம் 6 மாதத்தில் சரி செய்யப்படும் என முதல்வர் கூறினார் என்ற கேள்விக்கு,

மீனாட்சி அம்மன் கோயில் முன்பு இருந்தது போல தோற்றம் வர வேண்டும் என்பதற்காகவே காலதாமதம் போல் உள்ளது.

இதற்காக கற்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு பின் மண்டம் வேலைகள் நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மன் கோயில் கட்டிட பணிணில் அரசு மெத்தனமாக செயல்பட வில்லை.

அடுத்த கும்பாபிஷேகம் முன்பு மீனாட்சி அம்மன் கோயில் புனரமைக்கபட்டு மீண்டும் பழைய நிலைக்கு வரும். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.