கருணாநிதி சிலை திறப்பு: சரத் பவாருக்கு அழைப்பு…!

கருணாநிதி சிலை திறப்பு: சரத் பவாருக்கு அழைப்பு...!
Advertisement
Advertisement

மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது.கருணாநிதி சிலை திறப்பு: சரத் பவாருக்கு அழைப்பு…!

வரும் 16ஆம் தேதி நடைபெறும் சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

அகில இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் விழாவுக்கு வருகை தருகிறார்கள்.

இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்று தலைவர்களுக்கு நேரில் அழைப்பிதழ்களை வழங்கி வரவேற்று வருகிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களும்,

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்த ஸ்டாலின், அவருக்கு அழைப்பிதழ் வழங்கி கருணாநிதியின் சிலை திறப்புக்கு வருமாறு வரவேற்றிருக்கிறார். அப்போது ஸ்டாலின் உடன் சென்ற திமுக எம்.பி. கனிமொழியும் உடன் இருந்தார்.