தனியார் பாலில் சோப்பு நுரையா..?

41
583
தனியார் பாலில் சோப்பு நுரையா..?
Advertisement

தனியார் பாலில் சோப்பு நுரையா..?

Advertisement

சமீபத்தில் தனியார் பாலில் கலப்படம்செய்யப்படுவதாக தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதனால் பாலில் கலப்படம்குறித்து ஆராய, மதுரை ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் பால் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் முழுவதும் ஐந்து கட்டங்களில் பால் தரபரிசோதனை 28 குழுவின் தலைமையில் நடந்துவருகிறது .

அதில் மதுரை மாநகருக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 108 மாதிரிகள்  இன்று முதல் கட்டமாக எடுத்துவரப்பட்டு கோ.புதூர் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது .

அதில் மதுரை கோச்சடை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தனியார் பால் மாதிரியில் சோப்பு ஆயில் கலந்திருப்பது இயந்திரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது .

                              

அதனை தொடர்ந்து அந்த பாலை முழு ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கையை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் .

அதன் தலைமை பொறுப்பினை ரமேஷ் என்ற அதிகாரி மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

அதிகநுறை வருவதற்காக பாலில் சோப்பு ஆயில் கலந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தி, மதுரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.