மேட்டூர் அணை தூர்வாருதலை நாளை தொடங்கி வைக்கிறார் பழனிச்சாமி..!

36
596
மேட்டூர் அணை தூர்வாருதலை நாளை தொடங்கி வைக்கிறார் பழனிச்சாமி..!
Advertisement

மேட்டூர் அணை தூர்வாருதலை நாளை தொடங்கி வைக்கிறார் பழனிச்சாமி..!

Advertisement

மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அணையை தூர்வாரும் பணியை தொடக்கி வைக்க உள்ளார்.மேட்டூர் அணை தூர்வாருதலை நாளை தொடங்கி வைக்கிறார் பழனிச்சாமி..!

மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மேட்டூர் அணை பாசனம் மூலம் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த அணையை தூர்வாருவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த 83 ஆண்டுகளில் இதுவரை மேட்டூர் அணையில் தூர்வாரப்படவில்லை. வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக் காரணமாக சுமார் 20 சதவிகித அளவுக்கு தூர்படித்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தூர் காரணமாக மேட்டூர் அணையில் முழுக் கொள்ளளவில் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு கடுமையான வறட்சி காரணமாக அணை முற்றிலும் வறண்டு விட்டது.

அணையில் தற்போது 20 அடி தண்ணீர் இருந்தாலும் எல்லாமே சகதிதான். எனவேதான் இந்த ஆண்டாவது அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அணை தூர்வாரப்படும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி நாளை ஞாயிறன்று தூர்வாரும் பணியை தொடக்கி வைக்கிறார்.

எத்தனையோ முதல்வர்கள் தமிழகத்தை ஆண்டிருந்தாலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர் அணை தூர்வாரும் நிலை ஏற்பட்டுள்ளது.