‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டர்..!

47
559
'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர்..!
Advertisement

‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டர்..!

Advertisement

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

‘மெர்சல்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் விஜய் – சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் ஒரு பாடலையும் படமாக்கவுள்ளனர்.

தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்திருப்பதால், ஆகஸ்ட் 20-ம் தேதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வெளியாகவுள்ளன.

அதற்கு முன்னதாகவே ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட படக்குழு முடிவு செய்ததுள்ளது.

‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்து, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு,

சத்யராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தங்களுடைய தயாரிப்பில் 100-வது படமாக பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘மெர்சல்’ பணிகளை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

செய்திகள்: ரோகிணி