மேகாலயாவில் 35 நாட்களுக்கு பின்னா் சுரங்கத்தில் இருந்து ஒரு உடல் மீட்பு…!

மேகாலயாவில் 35 நாட்களுக்கு பின்னா் சுரங்கத்தில் இருந்து ஒரு உடல் மீட்பு...!
Advertisement
Advertisement

மேகாலயாவில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் 15 தொழிலாளா்கள் சிக்கியிருந்த நிலையில் 35 நாட்களுக்குப் பின்னா் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மேகாலயாவின் ஷில்லாங்கில் பகுதியில் முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்து. இந்த சுரங்கத்திற்கு அருகிலேயே நதியும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் கடந்த டிசம்பா் மாதம் 13ம் நதியில் திடீா் வெள்ளம் ஏற்பட்டது. நிலக்கரி சுரங்கத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்ததால்,

அங்கு பணியாற்றிக் கொண்டு இருந்த 15 தொழிலாளா்கள் சுரங்கத்திற்குள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.

சுரங்கத்தின் ஆழம் மிகவும் அதிகம் என்பதாலும், சுரங்கத்திற்குள் செல்வதற்கு பல்வேறு இடா்கள் நீடித்ததாலும் மீட்பு பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையே நிலவியது.

மேலும் மேகாலயா அரசு விடுத்த அழைப்பின் அடிப்படையில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மீட்பு படை வீரா்கள் களத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் 35 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இந்திய கடற்படையினா் சுரங்கத்தில் இருந்து உயிாிழந்த நிலையில் ஒரு ஊழியரின் உடலை மீட்டுள்ளனா்.

சுரங்கத்தில் சுமாா் 200 அடி ஆழத்தில் இருந்து தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

மேலும் இதற பணியாளா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.