மதுரை அரசி மீனாட்சியின் திருக்கல்யாணம்..!

42
1019
திருக்கல்யாணம்
Advertisement

மதுரை அரசி மீனாட்சியின் திருக்கல்யாணம்..!

Advertisement

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா உற்சவம், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் சுந்தரேசரும், மீனாட்சி அம்மனும் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் பத்தாவது  நாளான இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

                                                        

இதற்காக மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மேடையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவை காண, தென் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள், திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியில் கூடி வருகின்றனர்.

                                                          

பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினரால் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மீனாட்சி அம்மனை திருக்கல்யாண கோலத்தில் தரிசித்தால் திருமணம் ஆகதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என நம்பப்படுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து, சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான, ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.