பச்சை.. பச்சையாய்.. பகுதி – 41..!

26
600
பச்சை.. பச்சையாய்.. பகுதி – 41..!
Advertisement

பச்சை.. பச்சையாய்.. பகுதி – 41..!

Advertisement

பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவத் திறன்களைக் கொண்டுள்ளன. பச்சை.. பச்சையாய்.. பகுதி – 41..!

குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற இடர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும்,

மருந்தாய்வர்கள் இவற்றைக் கொண்டு மாந்தரிலும் பிற விலங்குகளிலும் ஆய்வு செய்துள்ளனர்.

நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்கு ஆட்பட்டவர்களின் குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.

இச்செடிகளின் கிழங்குகளை சாப்பிடும் போது இதயத்தில் குருதிக்குழாய் அடைப்புகளின் போது ஏற்படும் திசு இறப்பைக் குறைப்பதாகவும் அறிந்துள்ளனர்.

கார்பன் டெட்ரா குளோரைடினாலும் பாராசிட்டமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பையும் இவை தடுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது

இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்.

தகவல்கள்: ரோகிணி