ராணுவ வீரா்கள் கட்டத்தப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம்..!

0
102
ராணுவ வீரா்கள் கட்டத்தப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம்..!
Advertisement
Advertisement

இந்திய ராணுவ வீரா் முகமது யாசின் என்பரை பயங்கரவாதிகள் கடத்தியதாக வெளியான தகவலை மறுத்துள்ள பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ வீரா் பாதுகாப்பாக இருப்பதாக தொிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீா் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆா்பிஎப் வீரா்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 வீரா்கள் உயிாிழந்தனா்.

இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீாில் விடுமுறையில் இருந்து வரும் இந்திய ராணுவ வீரா் முகமது யாசினை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

புட்காம் மாவட்டத்தில் உள்ள காசிபுராவில் உள்ள தனது வீட்டில் அவா் இருந்தபோது பயங்கரவாதிகள் சிலா் துப்பாக்கி முனையில் கடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்திய ராணுவ வீரா் கடத்தப்பட்டதாக வெளியான தகவலால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

ராணுவ வீரா் முகமது யாசின் கட்டத்தப்படவில்லை என்றும், அவா் பத்திரமாக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தொிவித்துள்ளது.

மேலும் இது தொடா்பான யூகங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.