ரஜினியை மிரட்டும் விஜய் சேதுபதி…!

ரஜினியை மிரட்டும் விஜய் சேதுபதி…!
Advertisement
Advertisement

பேட்ட படத்தின் முதல் பாடல் திங்கள்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ரஜினியின் பேட்ட திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் வரும் திங்கள்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மரணமாஸ் தலைகுத்து என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடல் தற்போது டிவிட்டரில் டிரெண்டிங்காகியுள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி ரஜினி தலையிலும், நாடியிலும் என இரண்டு துப்பாக்கிகளை வைத்திருப்பது போல் இருக்கிறது.

 

 

ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

ரஜினி மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்த போஸ்டரை தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீசான 2.0 படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது.

இந்நிலையில் பொங்கலுக்கு பேட்ட ரிலீசாகிறது. அடுத்தடுத்து ரஜினி படங்கள் வெளியாவதால், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.