மற்றொரு போர் வேண்டாம்- மலாலாவின் வேண்டுகோள்…!

மற்றொரு போர் வேண்டாம்- மலாலாவின் வேண்டுகோள்...!
Advertisement
Advertisement

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் கவலை அளிப்பதாகவும்,

இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண முன்வரவேண்டும் என மாலாலா கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மலாலா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், போரினால் ஏற்படும் பாதிப்புகள் அனைவரும் அறிந்ததே.

பதிலடி தாக்குதல்கள், பழிக்கு பழி வாங்கல் போன்ற நடவடிக்கைகள் எப்போது பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகளை தருவதில்லை.

பிரச்னைகள் போராக ஒருமுறை வடிவம் பெற்றுவிட்டால், அவற்றை முடிப்பது கடினம் தான்.

எல்லையில் ஏற்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளால் இருநாட்டு மக்களின் நிலை கவலை அளிக்கிறது. முன்னதாக ஏற்பட்ட போர்களில் லட்சகணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன் பாதிப்புகளை இன்றும் உணரமுடிகிறது. நிலைமை இப்படியிருக்க, மீண்டும் ஒரு போர் வேண்டாம்.

போரினால் பாதிக்கப்படும் மக்களை, இந்த உலகம் அவ்வளவாக பொருட்டாக மதிப்பதும் கிடையாது.

இதுபோன்ற கடினமான சூழில் தான் பாக்., பிரதமர் இம்ரான் கான், இந்தியப் பிரதமர் மோடி தலைமை பண்புகளை காண்பிக்க வேண்டும்.

பிரச்னை தொடர்பாக, இருவரும் ஒருசேர அமர்ந்து வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இதேபோல, நீண்ட நாட்களாக நிலவரி வரும் காஷ்மீர் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

சர்வதேச சமூகமும் கைக்கோர்த்து இந்தியா – பாகிஸ்தான் பிரச்னைக்கு ஆதரவு தர வேண்டும். தீவிரவாதம், கல்வி அறிவில்லாத நிலை, சுகாதார நெருக்கடிகள், வறுமை இவை தான் உண்மையான எதிர்கள்.

இதை தவிர்த்து மற்றொரு நாடு எதிரி அல்ல. இது இரண்டு நாட்டு மக்களுக்கும் தெரியும். என மலாலா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.