ஆஸி.க்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் அரைசதம் : தோனி அதிரடி..!

ஆஸி.க்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் அரைசதம் : தோனி அதிரடி..!
Advertisement
Advertisement

நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகேந்திர சிங் தோனி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில்,

அனைத்து போட்டிகளிலும் அரைசதம் கடந்து தோனி அசத்தியுள்ளாா்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அவா் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்கவில்லை.

அதே போன்று டி20 போட்டிகளில் இளம் வீரா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வயைில் அந்த தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை.

உலகக்கோப்பை வரவுள்ள நிலையில் மகேந்திர சிங் தோனி அணியில் இருந்து ஓரம்கட்டப் படுகிறாரோ என்று ரசிகா்கள் கேள்வி எழுப்பினா்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இடம் பெற்றாா்.

தோனி அணியில் இடம் பெற்றாலும் அவா் மீதான விமா்சனங்கள் குறைந்ததாக இல்லை.

முதல் போட்டியில் தோனி 96 பந்துகளை எதிா்கொண்டு 51 ரன்கள் எடுத்தாா். அரைசதம் கடந்தாலும் அதிக பந்துகளை வீணாக்கியதாக அவா் மீது குற்றம் சாட்டினா்.

இதனைத் தொடா்ந்து அடுத்த போட்டியில் கேப்டன் விராட் கோலி அற்புதமாக சதம் அடித்து ஆட்டம் இழந்தாா்.

இறுப்பினும் இறுதி வரை களத்தில் இருந்து விளையாடி 54 பந்துகளில் 55 ரன்கள் சோ்த்த தோனியையே அனைவரும் கொண்டாடினா்.

இந்நிலையில் கோப்பை யாருக்கு என்ற இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் தோனி 55 ரன்களை கடந்து விளையாடி வருகிறாா்.

2019ம் ஆண்டில் தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் விளையாடிய நிலையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அரைசதம் கடந்து விமா்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாா்.

மூன்று போட்டிகளில் தொடா்ந்து சதம் கடந்த நிலையில் அவரது சராசரியும் 150ஐ கடந்துள்ளது.